Service Cluster of Divisional Secretariat
சிவில் பதிவுகள்
அனுமதி வழங்கல்
சான்றிதழ்கள் வழங்குதல்
ஓய்வூதிய கொடுப்பனவு
நில நிர்வாகம்
சமூக நலம் மற்றும் நன்மைகள்
கொள்முதல்கள்
அபிவிருத்தி திட்டம்
எம்மால் வழங்கப்படும் சேவைகளைக் கண்டறிய...
தேவைக்கேற்ப, தொடர்புடைய வகையைச் சரிபார்க்கவும். நீங்கள் தேடிய தகவலை உங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், தயவு செய்து எங்களை தொடர்பு கொள்ளவும்.
தொடர்புகளுக்குHNB Assurance நிறுவனத்தின் வேலை வாய்ப்பு தொடர்பான செயலமர்வு
![]() |
![]() |
![]() |
![]() |
2022 இற்கான வாழ்வாதார உதவிக்கான விண்ணப்பம் கோரல்
2022 இற்கான வாழ்வாதார உதவி தேவைப்படுவோர் தமது விண்ணப்பங்களை கிராம மட்ட அலுவலர்களான கிராம அலுவலர், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் ஆகியோரிடம் உள்ள விண்ணப்பப்படிவங்களின் ஊடாக தங்கள் கோரிக்கைகளை சமர்ப்பிக்கமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்.
HNB Assurance நிறுவனத்தின் தொழில் வாய்ப்பு தொடர்பான கருத்தரங்கு
காரைநகர் பிரதேச செயலகத்தில் மனித வள அபிவிருத்தி உத்தியோகத்தரின் ஏற்பாட்டில் 12.01.2022 அன்று HNB Assurance நிறுவனத்தினால் தொழில் வாய்ப்பினை எதிர்பார்த்து காத்திருக்கும் இளைஞர் யுவதிகளுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கு நடைபெற்றது.இந்நிழ்வில் காரைநகர் பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர் யுவதிகளும், பிரதேச செயலக உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வின் அடுத்த கட்டமாக எதிர்வரும் வெள்ளிக்கிழமை 21.01.2022 அன்று காலை 10 மணியளவில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் விழிப்புணர்வு செயலமர்வு இடம்பெறவுள்ளது. HNB Assurance நிறுவனத்தின் வேலைவாய்ப்பானது முழுநேரம், பகுதிநேரத்தினை அடிப்படையாக கொண்டதாக காணப்படுவதுடன் யாழ்மாவட்டத்தில் இரு கிளைகள் புதிதாக ஆரம்பிக்கப்பட இருப்பதும் குறிப்படத்தக்கது. எனவே வேலைவாய்ப்பினை எதிர்பார்த்து காத்திருக்கும் இளைஞர் யுவதிகளை இந்நிகழ்வில் கலந்துகொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
![]() |
![]() |
தைப்பொங்கல் நிகழ்வு 2022
2022 ஆம் ஆண்டிற்கான தைப்பொங்கல் நிகழ்வானது காரைநகர் பிரதேச செயலக ஊழியர் நலன்புரி சங்கத்தின் ஏற்பாட்டில் இன்று (திங்கட்கிழமை) 18.01.2022 அன்று பிரதேச செயலக முன்றலில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வில் பிரதேச செயலாளர் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
![]() |
![]() |
![]() |
![]() |
சிறுவர் மற்றும் பெண்கள் முறைப்பாடுகளை கையாள்வதற்கான மாதாந்த கலந்துரையாடல்
சிறுவர் மற்றும் பெண்கள் முறைப்பாடுகளை கையாள்வதற்கான மாதாந்த கலந்துரையாடலின் முதலாவது கலந்துரையாடல் உதவிப்பிரதேச செயலாளர் தலைமையில் 12.01.2022 அன்று நடைபெற்றது.
இதில் சுகாதார வைத்திய அதிகாரி, கோட்டக்கல்விப் பணிப்பாளர், பொலிஸ் உத்தியோகத்தர் மற்றும் சிறுவர் பெண்கள் பிரிவு உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.
![]() |
![]() |
![]() |
![]() |
































