விலைமனுக் கோரல்
*************************
எமது பிரதேச செயலகப் பிரிவிலுள்ள கசூரினா சுற்றுலா அபிவிருத்தித் திட்டம்- 2025/2026 இன்கீழ் வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலை வாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சினால் மேற்க்கொள்ளப்படவுள்ள 40 மில்லியன் ரூபா வேலைத் திட்டங்களுக்கான விலை மனுக்கள் 05.08.2026 புதன் கிழமை Daily News ஆங்கிலப் பத்திரிகையில் (பக்கம் 24) பிரசுரிக்கப்பட்டுள்ளது.768950328 1354304440189381 2812037675519662016 n

வட மாகாண பண்பாட்டலுவல்கள் அலகின் அனுசரணையுடன் காரைநகர் பிரதேச செயலகமும் கலாசார பேரவையும் இணைந்து நடாத்திய பிரதேசப் பண்பாட்டுப் பெரு விழாவானது பிரதேச செயலாளர் செல்வி.ந.ரஞ்சனா அவர்களின் தலைமையில் 2025/8/14 ஆம் திகிதி காலை 9.30 மணியளவில் காரைநகர் இந்துக்கல்லூரி மண்டபத்தில் நடைபெற்றது.இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக வட மாகாண கௌரவ ஆளுநர் உயர்திரு நா.வேதநாயகன் ஐயா அவர்களும்,சிறப்பு விருந்தினர்களாக யாழ் மாவட்டச் செயலகத்தின் மேலதிக அரசாங்க அதிபர் திரு .கை.சிவகரன் அவர்களும் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் மேனாள் பேராசிரியர் எஸ்.சிவலிங்கராசா அவர்களும் கௌரவ விருந்தினர்களாக முது கலைஞர் திரு.சு.தர்மலிங்கம் அவர்களும் இளங்கலைஞர் திரு.நா.பிரபாகரன் அவர்களும் ,ஏனைய திணைக்கள உத்தியோகத்தர் ,பிரதேச செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள், ஏனைய உத்தியோகத்தர்கள், பிரதேச கலைஞர்கள் மற்றும் பிரதேச மக்கள் அனைவரும் கலந்து கொண்டார்கள்.இந் நிகழ்வில் காரைநகர் பிரதேச பண்பாடுகளைப் பிரதிபலிக்கும் பாண்பாட்டு ஊர்திகளும் கலைநிகழ்வுகளும் சிறப்பாக நடைபெற்றது.

536262087 1076347894651705 8936812807244454018 n534425081 1076362034650291 8207431319847626493 n535037435 1076348694651625 2017822561456229015 n534825940_1076349821318179_2102684120605701121_n.jpg536213578 1076348907984937 4062651297935488101 n534567925 1076347884651706 6176480878012645271 n

2025 ஆம் ஆண்டிற்கான அலுவலக கடமைச் செயற்பாடுகள் எமது பிரதேச செயலாளர் செல்வி.ந.ரஞ்சனா அவர்களின் தலைமையில் தேசிய கொடியேற்றப்பட்டு தேசிய கீதம் இசைத்தலுடன் ஆரம்பித்து வைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து நாட்டிற்காக உயிர்த்தியாகம் செய்த அனைவரையும் நினைவு கூர்ந்து 2 நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
 
Clean Sri Lanka தேசிய நிகழ்ச்சி திட்டத்துடன் இணைந்ததாக சத்தியப்பிரமாணம் செய்யப்பட்டதுடன், ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற Clean Sri Lanka நிகழ்ச்சி திட்டத்தினை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு இலத்திரனியல் அலைவரிசை மூலம் நேரடியாக எமது அலுவலர்கள் பார்வையிடும் வண்ணம் ஒலி, ஒளிபரப்பு செய்யப்பட்டது.
 
அதனைத் தொடர்ந்து பிரதேச செயலாளர் உரை மற்றும் பதவிநிலை உத்தியோகத்தர்களது வாழ்த்து உரை மற்றும் உத்தியோகத்தர்களின் கலைநிகழ்வுகளும் இடம்பெற்றது.
 
 471970566 911089827844180 7017362340417194725 n  471992563 911089784510851 7586352437802692851 n  472362910 911090097844153 6082090638949006323 n
 472204255 911090864510743 6464664307501835005 n  471600142 911090144510815 3297289445691706850 n  472253100 911090911177405 820066468292268081 n
 471978963 911091037844059 6455506410167448800 n  472329470 911092101177286 6919054051781059229 n  472320987 911097624510067 2664026360136492159 n
வீடமைப்புத் திட்டம் 2025  பயனாளிகள் தெரிவு வீடமைப்புத் திட்டம் 2025  பயனாளிகள் தெரிவு 

நகர அபிவிருத்தி,  நிர்மாணிப்பு மற்றும் வீடமைப்பு அமைச்சினால் 2025 ம் ஆண்டு எமது செயலக பிரிவில் வீட்டுத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக  ரூபா 01  மில்லியன் பெறுமதியான 10 வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.  இப் பயனாளிகளை தெரிவு செய்வதற்காக எமது பிரிவில் வீடு தேவையானோர் பட்டியல் Housing Master List இருந்து புள்ளியிடலின் அடிப்படையில் வீட்டுத் திட்டத்திற்கான அடிப்படைத் தகமைகள் மற்றும் தெரிவுக்கான நியதிகளின் அடிப்படையில் பெற்ற புள்ளிகளினை கொண்டு 10 பயனாளிகள் தெரிவு செய்யப்பட்டுள்ளன. அவற்றின் முழுமையான விபரம் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. இத் திட்டத்திற்காக தெரிவு செய்யப்பட்ட பயனாளிகள் பிரதேச செயலகம் மற்றும் தெரிவு செய்யப்பட்ட கிராம அலுவலர் பிரிவுகளில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இத் தெரிவு தொடர்பாக ஏதேனும் முறைப்பாடுகள் இருப்பின் எழுத்து மூலம்  07.03.2025  திகதிக்கு முன்னதாக பிரதேச செயலக வரவேற்பு கரும பீடத்தில் வைக்கப்பட்டுள்ள வீட்டுத் திட்டத்திற்கான முறைப்பாட்டு பெட்டியில்  செலுத்த முடியும். இத் திகதிக்கு பின்னர் கிடைக்கப் பெறும் முறைப்பாடுகள் எவையும் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படமாட்டாது என்பதனையும் அறியத்தருகின்றேன்.

(குறிப்பு - இப்பட்டியல் இறுதியானது அல்ல,  முறைப்பாட்டின் பின்னராக மீளாய்வு செய்து றுதி செய்யப்படும் ) 
பிரதேச செயலாளர், பிரதேச செயலகம், காரைநகர்
 
 

 

 

நலன்புரி நன்மைகள் அஸ்வெசும கொடுப்பனவுகள் பெறுவதற்கான  இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் கோரப்பட்டும் காலம் நீடிக்கப்பட்டுள்ளது!!
❗ பின்வரும் விண்ணப்பதாரிகள் மட்டுமே இரண்டாம் கட்ட விண்ணப்பங்களை மேற்கொள்ள முடியும்.
✅1. அஸ்வெசும முதற் கட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியாது போனவர்கள் அல்லது விண்ணப்பிக்க தவறியவர்கள் அனைவரும் தற்போது விண்ணப்பிக்க முடியும்.
✅2. முதற் கட்ட விண்ணப்பங்கள் சமர்ப்பித்த போதிலும் விண்ணப்பதாரியின்  தகவல்கள் கணக்கெடுப்பு நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்படவில்லை எனின் அந்த விண்ணப்பதாரிகளும் தற்போது விண்ணப்பிக்க முடியும்.

குடியுரிமை சாசனம்

Scroll To Top