ප්රාදේශිය ලේකම් කාර්යාල සේවා ගොනු
සිවිල් ලියාපදිංචිය
අවසර පත්ර/ බලපත්ර නිකුත් කිරීම
සහතික පත්ර නිකුත් කිරීම
විශ්රාම වැටුප් ගෙවීම්
ඉඩම් පරිපාලනය
සමාජ සුභසාධන සහ සහන
සමෘද්ධි වැඩසටහන්
ප්රසම්පාදන
සංවර්ධන වැඩසටහන්
අප සපයන සේවාවන්...
ඔබේ අවශ්යතාව අනුව අදාළ කාණ්ඩය වෙත පිවිස පරීක්ෂා කර බලන්න. ඔබ සොයන තොරතුරු එහිදී සොයා ගැනීමට නොහැකි වූයේ නම්, අප ඇමතීමට කාරුණික වන්න.
අප අමතන්නவீடமைப்புத் திட்டம் 2025 பயனாளிகள் தெரிவு
வீடமைப்புத் திட்டம் 2025 பயனாளிகள் தெரிவு வீடமைப்புத் திட்டம் 2025 பயனாளிகள் தெரிவு
நகர அபிவிருத்தி, நிர்மாணிப்பு மற்றும் வீடமைப்பு அமைச்சினால் 2025 ம் ஆண்டு எமது செயலக பிரிவில் வீட்டுத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக ரூபா 01 மில்லியன் பெறுமதியான 10 வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இப் பயனாளிகளை தெரிவு செய்வதற்காக எமது பிரிவில் வீடு தேவையானோர் பட்டியல் Housing Master List இருந்து புள்ளியிடலின் அடிப்படையில் வீட்டுத் திட்டத்திற்கான அடிப்படைத் தகமைகள் மற்றும் தெரிவுக்கான நியதிகளின் அடிப்படையில் பெற்ற புள்ளிகளினை கொண்டு 10 பயனாளிகள் தெரிவு செய்யப்பட்டுள்ளன. அவற்றின் முழுமையான விபரம் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. இத் திட்டத்திற்காக தெரிவு செய்யப்பட்ட பயனாளிகள் பிரதேச செயலகம் மற்றும் தெரிவு செய்யப்பட்ட கிராம அலுவலர் பிரிவுகளில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இத் தெரிவு தொடர்பாக ஏதேனும் முறைப்பாடுகள் இருப்பின் எழுத்து மூலம் 07.03.2025 திகதிக்கு முன்னதாக பிரதேச செயலக வரவேற்பு கரும பீடத்தில் வைக்கப்பட்டுள்ள வீட்டுத் திட்டத்திற்கான முறைப்பாட்டு பெட்டியில் செலுத்த முடியும். இத் திகதிக்கு பின்னர் கிடைக்கப் பெறும் முறைப்பாடுகள் எவையும் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படமாட்டாது என்பதனையும் அறியத்தருகின்றேன்.
(குறிப்பு - இப்பட்டியல் இறுதியானது அல்ல, முறைப்பாட்டின் பின்னராக மீளாய்வு செய்து இறுதி செய்யப்படும் )
பிரதேச செயலாளர், பிரதேச செயலகம், காரைநகர்

2025 ஆம் ஆண்டிற்கான அலுவலக கடமையை ஆரம்பித்தல் நிகழ்வு
2025 ஆம் ஆண்டிற்கான அலுவலக கடமைச் செயற்பாடுகள் எமது பிரதேச செயலாளர் செல்வி.ந.ரஞ்சனா அவர்களின் தலைமையில் தேசிய கொடியேற்றப்பட்டு தேசிய கீதம் இசைத்தலுடன் ஆரம்பித்து வைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து நாட்டிற்காக உயிர்த்தியாகம் செய்த அனைவரையும் நினைவு கூர்ந்து 2 நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
Clean Sri Lanka தேசிய நிகழ்ச்சி திட்டத்துடன் இணைந்ததாக சத்தியப்பிரமாணம் செய்யப்பட்டதுடன், ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற Clean Sri Lanka நிகழ்ச்சி திட்டத்தினை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு இலத்திரனியல் அலைவரிசை மூலம் நேரடியாக எமது அலுவலர்கள் பார்வையிடும் வண்ணம் ஒலி, ஒளிபரப்பு செய்யப்பட்டது.
அதனைத் தொடர்ந்து பிரதேச செயலாளர் உரை மற்றும் பதவிநிலை உத்தியோகத்தர்களது வாழ்த்து உரை மற்றும் உத்தியோகத்தர்களின் கலைநிகழ்வுகளும் இடம்பெற்றது.
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
விற்பனை சந்தை
இன்றைய தினம்( 2024.11.25) திங்கட்கிழமை மு.ப 09.30 மணிக்கு எமது பிரதேச செயலக சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி பிரிவும் தொழில்துறை திணைக்களமும் இணைந்து நடாத்திய மாதாந்த விற்பனை சந்தை பிரதேச செயலக வளாகத்தில் நடைபெற்றது.
"அஸ்வெசும நலன்புரித்திட்டம் 2024” விண்ணப்பம் சமர்ப்பிக்க தவறியவர்களிற்கான மீண்டும் ஓர் சந்தர்ப்பம்!!!
நலன்புரி நன்மைகள் அஸ்வெசும கொடுப்பனவுகள் பெறுவதற்கான இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் கோரப்பட்டும் காலம் நீடிக்கப்பட்டுள்ளது!!
பின்வரும் விண்ணப்பதாரிகள் மட்டுமே இரண்டாம் கட்ட விண்ணப்பங்களை மேற்கொள்ள முடியும்.
1. அஸ்வெசும முதற் கட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியாது போனவர்கள் அல்லது விண்ணப்பிக்க தவறியவர்கள் அனைவரும் தற்போது விண்ணப்பிக்க முடியும்.
2. முதற் கட்ட விண்ணப்பங்கள் சமர்ப்பித்த போதிலும் விண்ணப்பதாரியின் தகவல்கள் கணக்கெடுப்பு நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்படவில்லை எனின் அந்த விண்ணப்பதாரிகளும் தற்போது விண்ணப்பிக்க முடியும்.காரைநகர் பிரதேச செயலகத்தின் கீழ் பதிவுசெய்யப்பட்ட விளையாட்டுக்கழகங்களுக்கிடையிலான வருடாந்த விளையாட்டு விழா - 2024
எமது பிரதேச செயலகத்தின் கீழ் பதிவுசெய்யப்பட்ட விளையாட்டு கழகங்களுக்கிடையிலான வருடாந்த விளையாட்டு விழா 2024.06.04 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை பி.ப 02.30 மணிக்கு காரை சலன்சர்ஸ் விளையாட்டுக்கழக மைதானத்தில் பிரதேச செயலாளர் செல்வி. ரஞ்சனா நவரத்தினம் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் மைதான நிகழ்வுகளான 100M, 200M (ஆண்,பெண்) , 4×100 (ஆண்,பெண்) அஞ்சலோட்டம் என்பன நடைபெற்றது. உதைபந்தாட்ட இறுதிப் போட்டியில் தோப்புக்காடு விளையாட்டுக்கழகம் எதிர் ஐயனார் விளையாட்டுக் கழகத்திற்கிடையே நடைபெற்று இறுதியில் ஐயனார் விளையாட்டுக்கழகம் வெற்றி பெற்றது. அதனைத் தொடர்ந்து போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசில் வழங்கும் நிகழ்வும் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக திரு.ம.பிரதீபன் (பதில் அரசாங்க அதிபர் , மாவட்டசெயலகம், யாழ்ப்பாணம்) அவர்களும், சிறப்புவிருந்தினர்களாக திருமதி.ச.மஞ்சுளாதேவி (பிரதேச செயலாளர் , பிரதேசசெயலகம், ஊர்காவற்றுறை) அவர்கள், திரு.க.சிவகரன் (பிரதேச செயலாளர், பிரதேச செயலகம், வேலணை) அவர்கள், திருமதி.உ.கவிதா (பிரதேச செயலாளர், பிரதேச செயலகம், சங்கானை) அவர்கள், கௌரவ விருந்தினராகளாக திரு.அ.ஜெகதீஸ்வரன் (அதிபர், காரைநகர் இந்துக்கல்லூரி) அவர்களும் மற்றும் திரு. க. விஜிதரன் (மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர், மாவட்ட செயலகம், யாழ்ப்பாணம்) அவர்களும் மற்றும் திரு.கு.சர்வானந்தலிங்கம் (லண்டன், களபூமி பிரித்தானிய ஒன்றியச் செயலாளர்) அவர்கள், கலாநிதி.E.S.P நாகரத்தினம் (பிரபல தொழிலதிபர்) அவர்கள் மற்றும் திரு.பா.சஜிந்தராம் (தேசிய விளையாட்டு வீரன்) அவர்கள் மற்றும் பிரதேச செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், கிராம மட்ட உத்தியோகத்தர்கள், விளையாட்டுக்கழக வீர, வீராங்கனைகள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |