ප්රාදේශිය ලේකම් කාර්යාල සේවා ගොනු
සිවිල් ලියාපදිංචිය
අවසර පත්ර/ බලපත්ර නිකුත් කිරීම
සහතික පත්ර නිකුත් කිරීම
විශ්රාම වැටුප් ගෙවීම්
ඉඩම් පරිපාලනය
සමාජ සුභසාධන සහ සහන
සමෘද්ධි වැඩසටහන්
ප්රසම්පාදන
සංවර්ධන වැඩසටහන්
අප සපයන සේවාවන්...
ඔබේ අවශ්යතාව අනුව අදාළ කාණ්ඩය වෙත පිවිස පරීක්ෂා කර බලන්න. ඔබ සොයන තොරතුරු එහිදී සොයා ගැනීමට නොහැකි වූයේ නම්, අප ඇමතීමට කාරුණික වන්න.
අප අමතන්න2021 ஆம் ஆண்டிற்கான கடமைகளை ஆரம்பித்தல்
2021 ம் ஆண்டிற்கான கடமை ஆரம்பிக்கும் நிகழ்வானது காரைநகர் பிரதேச செயலக முன்றலில் 01.01.2021 காலை 9.00 மணியளவில் பிரதேச செயலாளர் திரு.மரியதாசன் ஜெகூ அவர்களின் தலைமையில் தேசிய கொடியேற்றலுடன் ஆரம்பிக்கப்பட்டு அதனைத் தொடர்ந்து தேசிய கீதம் இசைக்கப்பட்டது. அடுத்து மௌன அஞ்சலி, மற்றும் சத்தியப்பிரமாணம் எடுக்கும் நிகழ்வுகளுடன் 2021 ஆம் ஆண்டுக்கான கடமைகள் இனிதே ஆரம்பிக்கப்பட்டது.
அடுத்து எமது பிரதேச செயலாளர் திரு.மரியதாசன் ஜெகூ அவர்களின் வாழ்த்துரை இடம்பெற்றது, அதனைத் தொடர்ந்து பொது சுகாதார பரிசோதகர் அவர்கள் Covid 19 தொற்று வைரஸ் தொடர்பான விழிப்புணர்வு கருத்துக்களை வழங்கியமையும் குறிப்பிடத்தக்கது. இந் நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர், கணக்காளர், உதவி திட்டமிடல் பணிப்பாளர், நிர்வாக உத்தியோகத்தர், கிராம நிரவாக உத்தியோகத்தர், மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

COVID19 - பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்
கொரோனா வைரஸ் தொற்றினால் நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலைமை தொடர்பாக, காரைநகர் பிரதேசத்தில் முன்னெடுக்கப்பட வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பான பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் 30.03.2020 அன்று பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் பிற்பகல் 2 மணியளவில் பிரதேச செயலாளர் திரு.மரியதாஸ் ஜெகூ அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இக் கூட்டத்தில் பிரதேச செயலாளர், உதவிப்பிரதேச செயலாளர், கணக்காளர், உதவித்திட்டமிடல் பணிப்பாளர், சுகாதார வைத்திய அதிகாரி, பொலிஸ் பொறுப்பதிகாரி, பிரதேச சபைத் தலைவர் மற்றும் கடற்படைக் கட்டளை அதிகாரி ஆகியோர் கலந்து கொண்டனர்.
![]() |
![]() |
72 வது சுதந்திர தின நிகழ்வு
|
72 வது சுதந்திர தின நிகழ்வு எமது நாட்டின் 72 வது சுதந்திர தின நிகழ்வு (04.02.2020) எமது பிரதேச செயலகத்தில் காலை 8.00 மணிக்கு தேசியக் கொடியேற்றலுடன் ஆரம்பமாகி இறைவழிபாடு, மரக்கன்றுகள் நாட்டுதல் மற்றும் சிரமதான நிகழ்வு என்பன சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதேச செயலாளர், கணக்காளர், நிர்வாக உத்தியோகத்தர் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர். |
|
![]() |
![]() |
|
|
|
COVID 19 - Emergency Service Details
COVID - 19 அவசரகால செயற்பாட்டுமையம் மக்களுக்கு 24 மணி நேரசேவையை வழங்கக்கூடிய வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. அது பற்றிய தகவல்கள் சுவரொட்டிகள் மூலம் பொதுமக்களுக்குக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

Commencement of Work, Year – 2020
|
2020 ம் ஆண்டு கடமைகளை ஆரம்பித்தல் நிகழ்வானது காலை 09.30 மணிக்கு காரைநகர் பிரதேச செயலகத்தில் பிரதேச செயலர் தலைமையில் நடைபெற்றது.
|
|
![]() |
|
![]() |
![]() |






























