ප්රාදේශිය ලේකම් කාර්යාල සේවා ගොනු
සිවිල් ලියාපදිංචිය
අවසර පත්ර/ බලපත්ර නිකුත් කිරීම
සහතික පත්ර නිකුත් කිරීම
විශ්රාම වැටුප් ගෙවීම්
ඉඩම් පරිපාලනය
සමාජ සුභසාධන සහ සහන
සමෘද්ධි වැඩසටහන්
ප්රසම්පාදන
සංවර්ධන වැඩසටහන්
අප සපයන සේවාවන්...
ඔබේ අවශ්යතාව අනුව අදාළ කාණ්ඩය වෙත පිවිස පරීක්ෂා කර බලන්න. ඔබ සොයන තොරතුරු එහිදී සොයා ගැනීමට නොහැකි වූයේ නම්, අප ඇමතීමට කාරුණික වන්න.
අප අමතන්නதொழில் வழிகாட்டல் வாரத்தில் நடாத்தப்படவுள்ள போட்டிகள் தொடர்பான அறிவித்தல்.
![]() |
![]() |
![]() |
சுகாதார அமைச்சினால் வௌியிடப்பட்டுள்ள புதிய சுகாதார வழிகாட்டல்கள்
சுகாதார அமைச்சினால் புதிய சுகாதார வழிகாட்டல்கள் அடங்கிய கோவை ஒன்று வௌியிடப்பட்டுள்ளது.
எதிர்வரும் 31 ஆம் திகதி வரை அமுலாகும் வகையில், மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்து கட்டுப்பாடுகள் மற்றும் நிகழ்வுகள் தொடர்பான புதிய சுகாதார வழிகாட்டல்கள் வௌியிடப்பட்டுள்ளன. அதற்கமைய,
- வீட்டிலிருந்து வௌியேறுவதற்கு ஒருவருக்கு மாத்திரம் அனுமதி வழங்கப்படுவதுடன், தொழில் நிமித்தம் அல்லது சுகாதார தேவைகளுக்காக மாத்திரமே வெளியில் செல்வதற்கு அனுமதி வழங்கப்படுகின்றது.
- அத்தியாவசிய தேவைகளுக்காக ஒவ்வொரு மாகாணத்திற்குள்ளும் மட்டுப்படுத்தப்பட்ட அளவில், ஆசன எண்ணிக்கைக்கு அமைய பஸ் மற்றும் ரயில் சேவைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என சுகாதார வழிகாட்டல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
- தனியார் மற்றும் வாடகை வாகன சேவைகள், அந்தந்த பகுதிகளுக்குள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதுடன், கார் மற்றும் முச்சக்கரவண்டிகளில் ஆசன எண்ணிக்கைக்கு அதிகரிக்காத வகையில் சேவைகள் இடம்பெற வேண்டும் என வலியுறுத்தப்பட்டடுள்ளது.
- ஆசன எண்ணிக்கைக்கு அமையவே ஏனைய வாகனங்களும் சேவையில் ஈடுபட வேண்டும் என சுகாதார அமைச்சு வௌியிட்டுள்ள புதிய வழிகாட்டல் கோவையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
- ஆடை விற்பனை நிலையங்களில் கடுமையான சுகாதார வழிகாட்டல்கள் பின்பற்றப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
- விவசாய நடவடிக்கைககளின் போது சமூக இடைவௌியுடன், முகக்கவசம் அணிந்து, சுகாதார பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
- சில்லறை வர்த்தக நிலையங்களில் ஒரே தடவையில், அதிகபட்சமாக 10 பேருக்கு மாத்திரமே அனுமதி வழங்கப்படுகின்றது.
- திறந்த வர்த்தக நிலையங்கள் மற்றும் வாராந்த சந்தைகளில், அதன் இடவசதிகளின் அடிப்படையில் 25 வீதத்தினரையே ஒரே நேரத்தில் அனுமதிப்பதற்கு சுகாதார அமைச்சு அனுமதி வழங்கியுள்ளது.
- பேக்கரி, சிகையலங்கார நிலையங்கள், மின் உபகரண விற்பனை நிலையங்கள், கட்டட நிர்மாண பொருட்கள், தளபாட விற்பனை நிலையங்கள், புகைப்படங்களை எடுக்கும் நிலையங்களிலும் 25 வீதமானோருக்கே அனுமதி வழங்கப்படுகின்றது.
- முன்பள்ளிகள், பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட கல்வி நிலையங்கள் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளன.
உள்ளிட்ட விடயங்கள் அடங்கிய புதிய சுகாதார வழிகாட்டல் கோவை வௌியிடப்பட்டுள்ளது.




கிராமிய மட்ட காணிப்பயன்பாட்டுத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதன் மூலம் குறைந்த பாவனையிலுள்ள வீட்டுத்தோட்ட நிலங்களின் உற்பத்தித்திறனை மேம்படுத்தல் தொடர்பான செயற்திட்டம் - 2021
கிராமிய மட்ட காணிப்பயன்பாட்டுத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதன் மூலம் குறைந்த பாவனையிலுள்ள வீட்டுத்தோட்ட நிலங்களின் உற்பத்தித்திறனை மேம்படுத்தல் தொடர்பான செயற்திட்டமானது இன்று (22.07.2021) முற்பகல் 10.00 மணியளவில் காரைநகர் பிரதேச செயலக சிறு மாநாட்டு மண்டபத்தில் காரைநகர் வடமேற்கு (J/41) கிராம அலுவலர் பிரிவைச் சேர்ந்த தெரிவு செய்யப்பட்ட 20 பயனாளிகளுடன் நடைபெற்றது. இந்நிகழ்வில் வளவாளராக காரைநகர் கமநல சேவைகள் நிலையத்தின் விவசாய போதனாசிரியர் அவர்கள் கலந்து கொண்டு ”சாரல் சொட்டு நீர்ப்பாசனம்” தொடர்பான விளக்கவுரை பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது.
![]() |
![]() |
கலைப்படைப்புக்களின் சந்தை - 2021
கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் 12 மாத வேலைத்திட்டத்தில் யூலை மாத வேலைத்திட்டமான கலைப் படைப்புக்களின் சந்தை வேலைத்திட்டமானது 22.07.2021 அன்று காலை 9.00 மணியளவில் காரைநகர் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில்உதவிப் பிரதேச செயலாளர் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதேச செயலாளர், கணக்காளர், அலுவலக உத்தியோகத்தர்கள், கலைஞர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர். இக்கண்காட்சியில் பாரம்பரியப்பொருட்கள், புத்தகங்கள், பனை சார் உற்பத்திப்பொருட்கள், தைத்த ஆடைகள், காளான் என பல்வேறு பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டதுடன் விற்பனையும் இடம்பெற்றது.
![]() |
![]() |
![]() |
![]() |





























