GA CUP - 2018
யாழ்ப்பாண மாவட்ட செயலக நலன்புரிக் கழகம் நடாத்திய அரச அதிபர் வெற்றிக்கிண்ணம் 2018 ற்கான கரப்போட்டியில் காரைநகர் பிரதேச செயலக விளையாட்டு வீர்ர்கள் இரண்டாம் இடத்தைப் பெற்றுக் கொண்டனர்.


மனைப்பொருளியல் டிப்ளோமா பயிற்சி நெறி - 2018
2017 ஆம் ஆண்டு நடைபெற்ற மனைப்பொருளியல் டிப்ளோமா பயிற்சி நெறியில் மாவட்ட மட்டத்தில் பயிலுனர்களை அதிகளவு நேர்த்தியான பொருட்களை உருவாக்க வைத்து, யாழ் மாவட்டத்தில் முதலாமிடத்தைப் பெற்ற எமது பிரதேச செயலக தையல் போதனாசிரியர் திருமதி ப.மொறாயஸ் அவர்கள் கிராம அபிவிருத்தித் திணைக்களம் வட மாகாணத்தால் 31.10.2018 அன்று இவ் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

2017 ஆம் ஆண்டிற்கான கிராம அபிவிருத்தித் திணைக்களம் வட மாகாணத்தால் கள மேற்பார்வையின் போது யாழ் மாவட்டத்தில் அதிகூடிய புள்ளிகளைப் பெற்று முதலாமிடத்தைப் பெற்ற காரைநகர் பிரதேச செயலக டிப்ளோமா பயிற்சி நிலையத்திற்கு இவ் விருது 31.10.2018 அன்று வழங்கப்பட்டது.

Navarathiri Festival
காரைநகர் பிரதேச செயலக நவராத்திரி விழா
காரைநகர் பிரதேச செயலக நவராத்திரி விழா ஊழியர் நலன்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில் உத்தியோகத்தர்களின் பங்களிப்புடன் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் 17.10.2018 மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.
![]() |
![]() |
Nilamehawara Programme
காரைநகர் பிரதேச செயலக உத்தியாகபூர்வப்பணி ஜனாதிபதி மக்கள் சேவை
காரைநகர் பிரதேச செயலக உத்தியாகபூர்வப்பணி ஜனாதிபதி மக்கள் சேவை 01.10.2018 அன்று பிரதேச செயலர் திருமதி எஸ்.உஷா அவர்களின் வழிகாட்டுதலுடன் உள்நாட்டலுவல்கள் அமைச்சர் கௌரவ வஜிர அபயவர்த்தன மற்றும் உள்நாட்டலுவல்கள்இராஜாங்க அமைச்சர் கௌரவ அலவெத்துவல ஆகியோர் உட்பட கௌரவ அமைச்சர்கள் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் முக்கிய பிரமுகர்களின் பங்குபற்றுதலுடன் காரை இந்துக்கல்லூரியில் மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.
| |
| |
| |
| |
| |
| |






