சர்வதேச மகளிர் தினம் - 2021
”நாடும் தேசமும் உலகமும் அவளே” எனும் தொனிப்பொருளில் யாழ் மாவட்ட பெண் தொழில் முயற்சியாளர்களது உற்பத்திப்பொருள் கண்காட்சியும் விற்பனையும் யாழ் மாவட்டச் செயலக வளாகத்தில் 08.03.2021 ஆம் திகதி காலை 08.30 மணி தொடக்கம் 4.30 மணி வரை நடைபெற்றது. இந் நிகழ்வில் காரைநகர் பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட பெண் தொழில் முயற்சியாளர்களின் உற்பத்திகளான கைப்பை , கை கழுவும் திரவம், பாரம்பரிய உணவுற்பத்தி பொருட்கள், நல்லெண்ணை, தேங்காயெண்ணை, பனை பொருள் உற்பத்திகள் என்பன காட்சிப்படுத்தப்பட்டு விற்பனை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
![]() |
![]() |
||||
73 ஆவது சுதந்திரதின நிகழ்வு

எமது நாட்டின் 73 ஆவது தேசிய சுதந்திரதின விழாவானது 'பாதுகாப்பான தேசம் - செழிப்பான நாடு' எனும் தொனிப்பொருளை முன்னிலைப்படுத்தி 04.02.2021 அன்று காலை 8.00 மணியளவில் காரைநகர் பிரதேச செயலகத்தில் எமது பிரதேச செயலாளர் திரு.மரியதாசன் ஜெகூ அவர்களின் தேசியக் கொடியேற்றலுடன் ஆரம்பமாகியது. அதனை தொடர்ந்து பிரதேச செயலக உத்தியோகத்தர்களால் அலுவலக சூழலில் சிரமதானம் மேற்கொள்ளப்பட்டதுடன், சுதந்திரதின விழாவின் 'பசுமை' எண்ணக்கருவினை முன்னிலைப்படுத்தி மரக்கன்றுகள் நாட்டும் பணியும் இடம்பெற்றது.
![]() |
![]() |
||
தைப்பொங்கல் நிகழ்வு 2021
காரைநகர் பிரதேச செயலக தைப்பொங்கல் நிகழ்வானது காரைநகர் பிரதேச செயலக ஊழியர் நலன்புரி சங்கத்தின் ஏற்பாட்டில் 15.01.2021 அன்று பிரதேச செயலாளர் அவர்களின் தலைமையில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வில் பிரதேச செயலாளர், உதவிப்பிரதேச செயலாளர், உதவித்திட்டமிடல் பணிப்பாளர், நிர்வாக உத்தியோகத்தர் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.


2021 ஆம் ஆண்டிற்கான கடமைகளை ஆரம்பித்தல்
2021 ம் ஆண்டிற்கான கடமை ஆரம்பிக்கும் நிகழ்வானது காரைநகர் பிரதேச செயலக முன்றலில் 01.01.2021 காலை 9.00 மணியளவில் பிரதேச செயலாளர் திரு.மரியதாசன் ஜெகூ அவர்களின் தலைமையில் தேசிய கொடியேற்றலுடன் ஆரம்பிக்கப்பட்டு அதனைத் தொடர்ந்து தேசிய கீதம் இசைக்கப்பட்டது. அடுத்து மௌன அஞ்சலி, மற்றும் சத்தியப்பிரமாணம் எடுக்கும் நிகழ்வுகளுடன் 2021 ஆம் ஆண்டுக்கான கடமைகள் இனிதே ஆரம்பிக்கப்பட்டது.
அடுத்து எமது பிரதேச செயலாளர் திரு.மரியதாசன் ஜெகூ அவர்களின் வாழ்த்துரை இடம்பெற்றது, அதனைத் தொடர்ந்து பொது சுகாதார பரிசோதகர் அவர்கள் Covid 19 தொற்று வைரஸ் தொடர்பான விழிப்புணர்வு கருத்துக்களை வழங்கியமையும் குறிப்பிடத்தக்கது. இந் நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர், கணக்காளர், உதவி திட்டமிடல் பணிப்பாளர், நிர்வாக உத்தியோகத்தர், கிராம நிரவாக உத்தியோகத்தர், மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

COVID19 - பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்
கொரோனா வைரஸ் தொற்றினால் நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலைமை தொடர்பாக, காரைநகர் பிரதேசத்தில் முன்னெடுக்கப்பட வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பான பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் 30.03.2020 அன்று பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் பிற்பகல் 2 மணியளவில் பிரதேச செயலாளர் திரு.மரியதாஸ் ஜெகூ அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இக் கூட்டத்தில் பிரதேச செயலாளர், உதவிப்பிரதேச செயலாளர், கணக்காளர், உதவித்திட்டமிடல் பணிப்பாளர், சுகாதார வைத்திய அதிகாரி, பொலிஸ் பொறுப்பதிகாரி, பிரதேச சபைத் தலைவர் மற்றும் கடற்படைக் கட்டளை அதிகாரி ஆகியோர் கலந்து கொண்டனர்.
![]() |
![]() |










