இடர்கால நடமாடும் சேவை விபரம் - காரைநகர் பிரதேச செயலகம்

”பால் மற்றும் பால்நிலை வன்முறைகளற்ற ஆரேகாக்கியமான வேலைச்சூழல் ” விழிப்புணர்வு நிகழ்வு
”பால் மற்றும் பால்நிலை வன்முறைகளற்ற ஆரேகாக்கியமான வேலைச்சூழல்” எனும் தொனிப்பொருளில் செயற்பாட்டுக் குழுவினால் தீர்மானிக்கப்பட்ட வகையில் முதற்கட்டமாக உத்தியோகத்தர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்வானது இன்றைய தினம் (17.03.2021) காலை 09.30 மணியளவில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் Solidarity நிறுவனத்தின் நிதி அனுசரணையுடன் நடைபெற்றது. இந்நிகழ்வில் எமது பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் 25 பேர் கலந்து கொண்டனர். மேலும் இந்நிகழ்வில் பால், பால்நிலை, பால்நிலை வன்முறை, பாலியல் தொந்தரவு தொடர்பாகவும் செயற்குழு செயற்பாட்டின் தொடர் செயற்பாடுகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்படடது.
![]() |
![]() |
காணி ஆவணங்கள் வழங்கல் நிகழ்வு
காரைநகர் பிரதேச செயலகத்தில் 15.03.2021 ஆம் திகதி பி.ப 3.30 மணியளவில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் காரைநகர் தென்மேற்கு (J/45) கிராம அலுவலர் பிரிவில் நீலங்காடு கிராமத்தில் காணிக்கச்சேரி மூலம் தெரிவு செய்யப்பட்ட காணி அற்ற மற்றும் நீண்டகாலமாக காணி ஆவணம் இன்றி அரச காணியில் குடியிருந்த 09 நபர்களுக்கு காணி அபிவிருத்திக் கட்டளைச்சட்டத்தின் கீழ் காணி அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டது.
![]() |
![]() |
ஊழியர் நலன்புரிச்சங்க வருடாந்த ஒன்றுகூடலும் பிரிவுபசார நிகழ்வும் - 2021
காரைநகர் பிரதேச செயலக ஊழியர் நலன்புரிச்சங்க வருடாந்த ஒன்றுகூடலும் பிரிவுபசார நிகழ்வும் 06.03.2021 சனிக்கிழமை காலை 09.30 மணிக்கு ஊழியர் நலன்புரிச்சங்க தலைவர் திரு. சி.மயுரன் தலைமையில் ஆரம்பமானது. இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக எமது பிரதேச செயலரும், நலன்புரிச்சங்க போசகருமாகிய மதிப்புக்குரிய திரு.மரியதாசன் ஜெகூ அவர்கள் கலந்துகொண்டார்.
இந்நிகழ்விலே விருந்தினர்கள் வரவேற்கப்பட்டு அழைத்துவரப்பட்டதுடன் மங்கள விளக்கேற்றல், வரவேற்பு நடனம் போன்ற நிகழ்வுகளுடன் ஆரம்பமாகி கடந்த ஆண்டு எமது பிரதேச செயலகத்திலிருந்து ஓய்வுபெற்று, இடமாற்றம் பெற்று சென்ற உத்தியோகத்தர்களின் சேவையைப்பாராட்டி அவர்களை கௌரவிக்கும் நிகழ்வும் இடம்பெற்றது. அதனைத்தொடர்ந்து நிகழ்வினை சிறப்பிக்கும் வகையில் மகிழ்வுட்டல் நிகழ்வுகள், இசை நிகழ்வுகள் அலுவலர்களால் நிகழ்த்தப்பட்டது. அத்துடன் மதிய உணவும் வழங்கப்பட்டு அதனைத்தொடர்ந்து இசை நிகழ்வுகள் சிறப்பாக நடாத்தப்பட்டு பி.ப 3.30 மணியளவில் விழா இனிதே நிறைவுற்றது.
![]() |
![]() |
மகா சிவராத்திரி விழா - 2021
இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்கனத்தின் அனுசரணையில் காரைநகர் பிரதேச செயலக மகா சிவராத்திரி விழாவானது 11.03.2021 வியாழக்கிழமை பாலாவேடை ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தில் சிறப்பாக நடைபெற்றது. பாலாவோடை முத்துமாரி அம்மன் அறநெறிப்பாடசாலை மாணவர்கள், திக்கரை இந்து அறநெறிப்பாடசாலை மாணவர்களின் பேச்சு, தனி நடனம், குழு நடனம், தனிப்பாடல், குழுப்பாடல் போன்ற கலை நிகழ்வுகன் நடைபெற்றன. இந்நிகழ்வில் இந்து கலாசார உத்தியோகத்தர், J/44 கிராம உத்தியோகத்தர் மற்றும் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர், ஆலய நிர்வாகத்தினர், திக்கரை இந்து இளைஞர் மன்ற உறுப்பினர்கள் கலந்து சிறப்பித்தனர். மேலும் கலை நிகழ்வில் பங்குபற்றிய மாணவர்களுக்கு பரிசில்களும் வழங்கப்பட்டன.
![]() |
![]() |
|||||
![]() |
![]() |

















