கிராமிய மட்ட காணிப்பயன்பாட்டுத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதன் மூலம் குறைந்த பாவனையிலுள்ள வீட்டுத்தோட்ட நிலங்களின் உற்பத்தித்திறனை மேம்படுத்தல் தொடர்பான செயற்திட்டம் - 2021
கிராமிய மட்ட காணிப்பயன்பாட்டுத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதன் மூலம் குறைந்த பாவனையிலுள்ள வீட்டுத்தோட்ட நிலங்களின் உற்பத்தித்திறனை மேம்படுத்தல் தொடர்பான செயற்திட்டமானது இன்று (22.07.2021) முற்பகல் 10.00 மணியளவில் காரைநகர் பிரதேச செயலக சிறு மாநாட்டு மண்டபத்தில் காரைநகர் வடமேற்கு (J/41) கிராம அலுவலர் பிரிவைச் சேர்ந்த தெரிவு செய்யப்பட்ட 20 பயனாளிகளுடன் நடைபெற்றது. இந்நிகழ்வில் வளவாளராக காரைநகர் கமநல சேவைகள் நிலையத்தின் விவசாய போதனாசிரியர் அவர்கள் கலந்து கொண்டு ”சாரல் சொட்டு நீர்ப்பாசனம்” தொடர்பான விளக்கவுரை பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது.
![]() |
![]() |
கலைப்படைப்புக்களின் சந்தை - 2021
கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் 12 மாத வேலைத்திட்டத்தில் யூலை மாத வேலைத்திட்டமான கலைப் படைப்புக்களின் சந்தை வேலைத்திட்டமானது 22.07.2021 அன்று காலை 9.00 மணியளவில் காரைநகர் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில்உதவிப் பிரதேச செயலாளர் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதேச செயலாளர், கணக்காளர், அலுவலக உத்தியோகத்தர்கள், கலைஞர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர். இக்கண்காட்சியில் பாரம்பரியப்பொருட்கள், புத்தகங்கள், பனை சார் உற்பத்திப்பொருட்கள், தைத்த ஆடைகள், காளான் என பல்வேறு பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டதுடன் விற்பனையும் இடம்பெற்றது.
![]() |
![]() |
![]() |
![]() |
பெற்றோருக்கான விழிப்புணர்வு நிகழ்வு – 2021
மனிதவலு மற்றும் வேலை வாய்ப்புத் திணைக்களத்தின் நிதி ஒதுக்கீட்டில் 20.07.2021 காலை 10.00 மணிக்கு J/44 ஊரி கிராம அலுவலர் அலுவலகத்தில் பெற்றோரை விழிப்புணர்வூட்டும் நிகழ்வு நடாத்தப்பட்டது. இந்நிகழ்வினை காரைநகர் பிரதேச செயலக உதவிப்பிரதேச செயலாளர் செல்வி.கு.கஜனி அவர்கள் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.
இந்நிகழ்வில் காரை தெற்கு (J/44 ) கிராம அலுவலர் பிரிவைச்சேர்ந்த 46 பெற்றோர்கள் கலந்து கொண்டனர். இதன் போது பிள்ளைகளின் இன்றைய நடத்தைகள் தொடர்பானதும் அவர்களை எவ்வாறு நல்வழிப்படுத்தி இந்நாட்டிற்கும் பிரதேசத்திற்கும் சிறந்த கல்விமான்களாக ஆக்குவது தொடர்பான விழிப்புணர்வு ஊட்டப்பட்டது. மேலும் இன்றைய சூழ்நிலையில் மாணவர்களின் கற்றல் செயற்பாடு பற்றி ஆராயப்பட்டு தீர்வுகளும் வழங்கப்பட்டது.
இந் நிகழ்வில் வளவாளர்களாக சண்டிலிப்பாய் மற்றும் உடுவில் பிரதேச செயலக மனித வலு வேலை வாய்ப்புத்திணைக்கள உத்தியோகத்தர்களான திரு.சுரேஸ்குமார் மற்றும் திரு.குகநேசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
![]() |
![]() |
பால் மற்றும் பால்நிலை அடிப்படையிலான வன்முறைகளை ஒழிப்பதற்கான விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டம்
மகளிர் மற்றும் சிறுவர் முன்பள்ளி மற்றும் ஆரம்பக்கல்வி, கல்விச்சேவைகள் மற்றும் பாடசாலைகள் உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சின் இலங்கைப் பெண்கள் பணியகத்தின் நிதி ஒதுக்கீட்டில் முதற்கட்டமாக 25 பயனாளிகளுக்கு பால் மற்றும் பால்நிலை அடிப்படையிலான வன்முறைகளை ஒழிப்பதற்கான விழிப்புணர்வு நிகழ்வானது இன்றைய தினம்(14.07.2021) பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வு எமது உத்தியோகத்தர்களான உளவளத்துணை உத்தியோகத்தர், உளவளத்துணை உதவியாளர் மற்றும் சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர்களை வளவாளர்களாக கொண்டு நடாத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
![]() |
![]() |
















