Service Cluster of Divisional Secretariat
சிவில் பதிவுகள்
அனுமதி வழங்கல்
சான்றிதழ்கள் வழங்குதல்
ஓய்வூதிய கொடுப்பனவு
நில நிர்வாகம்
சமூக நலம் மற்றும் நன்மைகள்
கொள்முதல்கள்
அபிவிருத்தி திட்டம்
எம்மால் வழங்கப்படும் சேவைகளைக் கண்டறிய...
தேவைக்கேற்ப, தொடர்புடைய வகையைச் சரிபார்க்கவும். நீங்கள் தேடிய தகவலை உங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், தயவு செய்து எங்களை தொடர்பு கொள்ளவும்.
தொடர்புகளுக்குமுகப்பு
மனிதவலு மற்றும் வேலைவாய்ப்புத் திணைக்களத்தின் தொழில்வழிகாட்டல் வாரத்தினை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் இணையவழியினூடாக நடாத்தப்பட்டு வருகின்ற பேச்சுப்போட்டி நிகழ்வு
மனிதவலு மற்றும் வேலைவாய்ப்புத் திணைக்களத்தின் தொழில்வழிகாட்டல் வாரத்தினை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் இணையவழியினூடாக நடாத்தப்பட்டு வருகின்ற பேச்சுப்போட்டி நிகழ்வானது இன்று காரைநகர் பிரதேச மாணவர்களிற்கு இணையவழியினூடாக பி.ப 2.00 மணியளவில் நடைபெற்றது. இப்போட்டியில் இணைய வசதிகளை பெற்றுக்கொள்வதில் பிரச்சினைகளை எதிர்கொள்ளும் மாணவர்கள் Zoom நிகழ்நிலை மூலம் பிரதேச செயலக மனிதவலு வேலைவாய்ப்பு உத்தியோகத்தரின் ஏற்பாட்டில் யாழ்ரன் கல்லூரியில் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி கலந்து கொண்டனர். ஏனைய மாணவர்கள் இந்நிகழ்வில் தனிப்பட்ட முறையில் கலந்து கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.


மனிதவளம் மற்றும் வேலைவாய்ப்புத் திணைக்களத்தினால் தொழில் வழிகாட்டல் வாரத்தினை சிறப்பிக்கும் பொருட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள வினாடிவினா போட்டிக்கான விசேட வழிகாட்டல் கருத்தரங்கு!!!
தொழில் வழிகாட்டல் வாரத்தில் நடாத்தப்படவுள்ள போட்டிகள் தொடர்பான அறிவித்தல்.
![]() |
![]() |
![]() |
சுகாதார அமைச்சினால் வௌியிடப்பட்டுள்ள புதிய சுகாதார வழிகாட்டல்கள்
சுகாதார அமைச்சினால் புதிய சுகாதார வழிகாட்டல்கள் அடங்கிய கோவை ஒன்று வௌியிடப்பட்டுள்ளது.
எதிர்வரும் 31 ஆம் திகதி வரை அமுலாகும் வகையில், மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்து கட்டுப்பாடுகள் மற்றும் நிகழ்வுகள் தொடர்பான புதிய சுகாதார வழிகாட்டல்கள் வௌியிடப்பட்டுள்ளன. அதற்கமைய,
- வீட்டிலிருந்து வௌியேறுவதற்கு ஒருவருக்கு மாத்திரம் அனுமதி வழங்கப்படுவதுடன், தொழில் நிமித்தம் அல்லது சுகாதார தேவைகளுக்காக மாத்திரமே வெளியில் செல்வதற்கு அனுமதி வழங்கப்படுகின்றது.
- அத்தியாவசிய தேவைகளுக்காக ஒவ்வொரு மாகாணத்திற்குள்ளும் மட்டுப்படுத்தப்பட்ட அளவில், ஆசன எண்ணிக்கைக்கு அமைய பஸ் மற்றும் ரயில் சேவைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என சுகாதார வழிகாட்டல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
- தனியார் மற்றும் வாடகை வாகன சேவைகள், அந்தந்த பகுதிகளுக்குள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதுடன், கார் மற்றும் முச்சக்கரவண்டிகளில் ஆசன எண்ணிக்கைக்கு அதிகரிக்காத வகையில் சேவைகள் இடம்பெற வேண்டும் என வலியுறுத்தப்பட்டடுள்ளது.
- ஆசன எண்ணிக்கைக்கு அமையவே ஏனைய வாகனங்களும் சேவையில் ஈடுபட வேண்டும் என சுகாதார அமைச்சு வௌியிட்டுள்ள புதிய வழிகாட்டல் கோவையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
- ஆடை விற்பனை நிலையங்களில் கடுமையான சுகாதார வழிகாட்டல்கள் பின்பற்றப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
- விவசாய நடவடிக்கைககளின் போது சமூக இடைவௌியுடன், முகக்கவசம் அணிந்து, சுகாதார பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
- சில்லறை வர்த்தக நிலையங்களில் ஒரே தடவையில், அதிகபட்சமாக 10 பேருக்கு மாத்திரமே அனுமதி வழங்கப்படுகின்றது.
- திறந்த வர்த்தக நிலையங்கள் மற்றும் வாராந்த சந்தைகளில், அதன் இடவசதிகளின் அடிப்படையில் 25 வீதத்தினரையே ஒரே நேரத்தில் அனுமதிப்பதற்கு சுகாதார அமைச்சு அனுமதி வழங்கியுள்ளது.
- பேக்கரி, சிகையலங்கார நிலையங்கள், மின் உபகரண விற்பனை நிலையங்கள், கட்டட நிர்மாண பொருட்கள், தளபாட விற்பனை நிலையங்கள், புகைப்படங்களை எடுக்கும் நிலையங்களிலும் 25 வீதமானோருக்கே அனுமதி வழங்கப்படுகின்றது.
- முன்பள்ளிகள், பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட கல்வி நிலையங்கள் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளன.
உள்ளிட்ட விடயங்கள் அடங்கிய புதிய சுகாதார வழிகாட்டல் கோவை வௌியிடப்பட்டுள்ளது.




























