ප්රාදේශිය ලේකම් කාර්යාල සේවා ගොනු
සිවිල් ලියාපදිංචිය
අවසර පත්ර/ බලපත්ර නිකුත් කිරීම
සහතික පත්ර නිකුත් කිරීම
විශ්රාම වැටුප් ගෙවීම්
ඉඩම් පරිපාලනය
සමාජ සුභසාධන සහ සහන
සමෘද්ධි වැඩසටහන්
ප්රසම්පාදන
සංවර්ධන වැඩසටහන්
අප සපයන සේවාවන්...
ඔබේ අවශ්යතාව අනුව අදාළ කාණ්ඩය වෙත පිවිස පරීක්ෂා කර බලන්න. ඔබ සොයන තොරතුරු එහිදී සොයා ගැනීමට නොහැකි වූයේ නම්, අප ඇමතීමට කාරුණික වන්න.
අප අමතන්නதைப்பொங்கல் நிகழ்வு 2022
2022 ஆம் ஆண்டிற்கான தைப்பொங்கல் நிகழ்வானது காரைநகர் பிரதேச செயலக ஊழியர் நலன்புரி சங்கத்தின் ஏற்பாட்டில் இன்று (திங்கட்கிழமை) 18.01.2022 அன்று பிரதேச செயலக முன்றலில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வில் பிரதேச செயலாளர் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
![]() |
![]() |
![]() |
![]() |
HNB Assurance நிறுவனத்தின் தொழில் வாய்ப்பு தொடர்பான கருத்தரங்கு
காரைநகர் பிரதேச செயலகத்தில் மனித வள அபிவிருத்தி உத்தியோகத்தரின் ஏற்பாட்டில் 12.01.2022 அன்று HNB Assurance நிறுவனத்தினால் தொழில் வாய்ப்பினை எதிர்பார்த்து காத்திருக்கும் இளைஞர் யுவதிகளுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கு நடைபெற்றது.இந்நிழ்வில் காரைநகர் பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர் யுவதிகளும், பிரதேச செயலக உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வின் அடுத்த கட்டமாக எதிர்வரும் வெள்ளிக்கிழமை 21.01.2022 அன்று காலை 10 மணியளவில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் விழிப்புணர்வு செயலமர்வு இடம்பெறவுள்ளது. HNB Assurance நிறுவனத்தின் வேலைவாய்ப்பானது முழுநேரம், பகுதிநேரத்தினை அடிப்படையாக கொண்டதாக காணப்படுவதுடன் யாழ்மாவட்டத்தில் இரு கிளைகள் புதிதாக ஆரம்பிக்கப்பட இருப்பதும் குறிப்படத்தக்கது. எனவே வேலைவாய்ப்பினை எதிர்பார்த்து காத்திருக்கும் இளைஞர் யுவதிகளை இந்நிகழ்வில் கலந்துகொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
![]() |
![]() |
Year End Party - 2022
காரைநகர் பிரதேச செயலக நலன்புரிச்சங்கத்தின் ஏற்பாட்டில் வருடாந்த ஒன்றுகூடல் நிகழ்வு 08.01.2022 சனிக்கிழமை பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்நிகழ்வில் உத்தியோகததர்களின் கலை ஆற்றல்கள் வெளிப்படுத்தப்பட்டதுடன் உத்தியோகத்தர்களுக்கான பொழுதுபோக்கு விளையாட்டுக்களும் நடைபெற்றன. மேலும் இந்நிகழ்வில் எமது பிரதேச செயலகத்திலிருந்து கடந்த வருடம் இடமாற்றம் பெற்று சென்ற உத்தியோகத்தர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வும் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.
![]() |
|
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
சிறுவர் மற்றும் பெண்கள் முறைப்பாடுகளை கையாள்வதற்கான மாதாந்த கலந்துரையாடல்
சிறுவர் மற்றும் பெண்கள் முறைப்பாடுகளை கையாள்வதற்கான மாதாந்த கலந்துரையாடலின் முதலாவது கலந்துரையாடல் உதவிப்பிரதேச செயலாளர் தலைமையில் 12.01.2022 அன்று நடைபெற்றது.
இதில் சுகாதார வைத்திய அதிகாரி, கோட்டக்கல்விப் பணிப்பாளர், பொலிஸ் உத்தியோகத்தர் மற்றும் சிறுவர் பெண்கள் பிரிவு உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.
![]() |
![]() |
![]() |
![]() |
Commencement of Work - 2022
2022ஆம் ஆண்டுக்கான கடமைகளை ஆரம்பித்தல் நிகழ்வானது 03.01.2021 அன்று காரைநகர் பிரதேச செயலக முன்றலில் காலை 09.00 மணியளவில் தேசியக்கொடியேற்றலுடன் ஆரம்பமாகியது. இந்நிகழ்வில் பிரதேச செயலாளர் மற்றும் உத்தியோகத்தர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். அதனைத் தொடர்ந்து அலுவலர்கள் 2022 ஆம் ஆண்டுக்கான உறுதி மொழி எடுத்துக்கொண்டனர். மேலும் உத்தியோகத்தர்கள் அனைவரும் நாட்டிற்காக உயிர்த்தியாகம் செய்தவர்களுக்கு இரண்டு நிமிட மௌனஅஞ்சலி செலுத்தினார்கள். அதனைத் தொடர்ந்து பிரதேச செயலரின் உரை, சுகாதார நடைமுறைகள் தொடர்பான சுகாதார பரிசோதகரின் உரை ஆகியவற்றுடன் நிகழ்வு இனிதே நிறைவுபெற்றது.
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |











































