நலன்புரி கொடுப்பனவுகளை பெறுவதற்கு தகுதியானவர்களை அடையாளம் காணல் - 2022
2002 ஆம் வருட 24 ஆம் இலக்க நலன்புரி உதவிகள் சட்டத்தில் 7(1) ஆம் பந்தியின் பிரகாரம், நலன்புரி நிவாரண கொடுப்பனவுகளை பெற்றுக் கொடுப்பதற்கு தகுதியானவர்கள் அனைவரையும், அடையாளம் காண்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இதன்படி தாங்கள், அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்ற சமுர்த்தி, முதியோர், விஷேட தேவையுடையோர், சிறுநீரக நோயாளர்கள் மற்றும் பொதுசன உதவிக் கொடுப்பனவு போன்றனவற்றில், ஏதேனும் ஒரு நலன்புரி உதவிகளின் முறைமையின் கீழ், தற்போது பயன் பெற்றுக் கொண்டிருப்பின் அல்லது பெற்றுக் கொள்ளப்பட வேண்டியவர்கள் என தாங்கள் கருதினால், கீழ்க் குறிப்பிடப்படும் மாதிரிப்படிவத்துக்கு அமைவாக தயாரித்து விண்ணப்பப் படிவத்தினை, தாங்கள் நிரந்தரமாகவதியும் பிரதேசத்துக்குரிய உத்தியோகத்தர்/சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்/சமூக கிராம சேவை உத்தியோகத்தர்/முதியோர் உரிமைகள் மேம்பாட்டு உத்தியோகத்தரின் உறுதிப்படுத்தலுடன், எமது பிரதேச செயலாளருக்கு 2022.09.30 ஆம் திகதிக்கு முன்னர் அனுப்பிவைக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.






